வாழ்க்கை. எவ்வளவு எளிதாக அழகாக தான் மாறி போனது
இந்த செல்போனால்?!
காலை எப்பொழுது எழுந்திரிக்கின்றோமோ அப்போது
முதல் இரவு உறங்க செல்லும் வரை வாழ்வின் உற்ற நண்பனாய் இன்றிமையாத ஒன்றாக அமைந்து
விட்டது. ஒரு நாள் பொழுதை செல்போன் இன்றி கடத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு
விஷயமாகும். நமக்கு உபயோகமோ இல்லையோ அதனை கையில் எடுத்து பார்த்து பழகிய நமக்கு
அது இல்லை என்றால் அந்த நாளே மிகவும் வெறுமையாக இருக்கும். அதுவும் இந்த செல்போனில் இன்டர்நெட் வசதி
இருந்து, அதுவும் 3G ஸ்பீடில் கிடைக்குமே ஆனால் போதும் இந்த உலகமே நமது கைகளில்.பொதுவாக என்னை போன்று இந்த ஸ்மார்ட் செல்போனில்
இன்டர்நெட் உபயோகபடுத்துபவர்களை மூன்று வேறு வகையாக பிரிக்கலாம். அதில் ஒன்று
கேமிங் புலிகள், இரண்டாவது பேஸ்புக் சிங்கங்கள், மற்றொன்று நெட் ராஜாக்கள்.அதில் முதலாவது ரகத்தை சேர்ந்தவர்கள் இன்டர்நெட்
உலகில் எந்த கேம் இறக்கப்பட்டாலும் முதல் ஆளாக டவுன்லோடு செய்வதையே மிக பெரிய கடமையாக
கொண்டிருப்பார், மேலும் அந்த கேமை எவ்வாறு முடிப்பது என்பதையே எந்நேரமும்
சிந்தித்து நுணுக்கமாக ஆராய்ந்து அதன் உடனே ஒன்றிணைந்து விடுவர். முன்பெல்லாம்
எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது கேம் விளையாடிய நம் நண்பர்கள் இப்பொழுது எல்லா
நேரத்தையும் அதற்கான நேரமாக்கி அதை எப்படியாவது வெற்றிகரமாக முடிப்பதற்கு
துடிப்பர். இவர்களுக்கு சோறு தண்ணி என்பதெல்லாம் முக்கியமே இல்லை, ஒரு சித்தர்
போன்று நேரம் காலம் அனைத்தையும் தாண்டி அதனை முடிக்கும் வரை நிம்மதியாக தூக்கம்
வராது. இவ்வாறு பலவற்றை துறந்து ஒரு வழியாக அதனை முடித்து பின்னர் தமது சக
நண்பர்களுடன் அதனை சுவாரஸ்யமாக விவரித்தலில் தான் என்ன ஒரு அலாதியான சந்தோஷம்? இதுபோக
ஆன்லைன் கேமிங் என்பதும் இப்போது மற்றொரு பக்கம் வெகுவாக பிரபலமடைந்து விட்டது. இது நம்மை அடிமையாக்குவது மட்டுமன்றி உலகில் உள்ள பல்வேறு
நபர்களுடன் சவால் செய்து விளையாடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
இப்பொழுது
அடுத்த இரண்டு ரகங்களையும் ஒருசேர பார்க்கலாம். இந்த பேஸ்புக் சிங்கங்களும் நெட்
ராஜாக்களும் இன்டர்நெட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுவதில் கை
தேர்ந்தவர்கள்.
இப்பொழுது இந்த வாட்ஸ்அப் என்பது இளைஞர்கள்
அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்கும் அப்ளிகேசன்களில் ஒன்றாகி போனது. வாட்ஸ்அப்,
பேஸ்புக்கோடு எந்நேரமும் இணைந்திருப்போமே ஆனால் நாம் இந்த நாட்டில் ஏன் இந்த
உலகில் நடக்கும் எந்த ஒரு சிறு நிகழ்வையும் தவற விட வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில்
ஒபாமா என்ன செய்கின்றார் என்பது முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தடை நிலவரம்
என்ன என்பது வரை அத்துப்படியாக இருக்கலாம். அரசியல் புள்ளி நிலவரம், கிரிக்கெட்
ஸ்கோர், ஆங்கில அறிவு என பலவற்றையும் ஒரே இடத்தில் வாரி வழங்குவதில் முதல் இடம்
பேஸ்புக்குக்கே.இப்பொழுது எல்லாம் என் மனதில் நினைக்கும்
கருத்துக்களை நண்பர்களிடம், உறவினர்களிடம் அல்லது பொதுவாக கூறுகிறேனோ இல்லையோ
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ்ஸாக தட்டி விடவில்லை என்றால் மனதை போட்டு
உறுத்தி கொண்டே இருக்கும். இது மட்டுமன்றி பேஸ்புக்கில் விவாதங்கள்
செய்வதர்க்கென்றே பல குழுக்கள், பக்கங்கள் போன்றவை உள்ளன. உதாரணத்திற்கு இப்போது
‘வாலு’ படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என்பது விவாத
தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அதை பற்றி அங்கு என் கருத்தை ஒத்தவர்களிடத்தும்,
மாற்றுக்கருத்து உடையவர்களிடத்தும் ஜாலியாக விவாதித்து அருமையாக நேரத்தை கழிப்பேன்.வாட்ஸ்அப் க்ரூப்பை போல் உலகில் வேறு
மகிழ்ச்சியான இடம் இருந்து விட முடியாது. நாள் தோறும் பல விஷயங்களை சந்திக்கும்
நாம் அதனை இங்கு பகிர்ந்து கொள்ளும்போது சற்று இதமாக உணரலாம். பள்ளி நண்பர்கள்,
கல்லூரி நண்பர்கள், பகுதி நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் என அனைவரும் அவரவர்
இருந்த இடத்தில் இருந்தபடியே இங்கு சங்கமிக்க இயலும். இதில் ஒரு ஜாலியான விஷயம்
என்னவென்றால் இங்குள்ள க்ரூப் பெயர்களை வெளியாட்கள் பார்த்தால் கிறுகிறுத்து
போய்விடுவர். ஆடுகாலி பாய்ஸ், மஹால் ரௌடிஸ் & APT வாரிசுகள் இவையெல்லாம் என்னிடம் உள்ள சில
மிரட்டல் மாதிரிகள்.இந்த வாட்ஸ்அப் வாசிகளிடம் ஒரு டாபிக் சிக்கி
விட்டால் அவ்வளவுதான், அதனையே சுத்தி சுத்தி கலாய்த்து அன்றைய நாளையே குதூகலம்
ஆக்கி விடுவோம். சமீபத்தில் ஒரு பிரபல இயக்குனர் தனது படம் வெளி வரும் முன்னர் ஏதோ
ஒரு தனியார் டிவிக்காக கொடுத்த ஒரு பேட்டியை எதார்த்தமாக கண்ட நம் மக்கள் அதை
கொண்டு கிடைத்த கேப்பில் கிடா வெட்டி சென்ற இடமெல்லாம் எல்லா பக்கத்திலும் அவரை கண்டபடி
கலாய்த்து தள்ளினர். இது மட்டுமன்றி ‘என்னமா, நீங்க இப்படி பண்றீங்களேமா’ என்று ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சாதாரணமாக கூறப்பட்ட
ஒரு வசனத்தை உலக அளவில் ட்ரென்ட் ஆக்கியது யார்? பூரா நம்ம பயக தான். மேலும் இதுவே
இங்கு ஒரு போட்டோவாகவோ வீடியோவாகவோ கிடைத்து விட்டால் போதும், இங்கிருந்து அங்கு
அங்கிருந்து எங்கேயோ என்று அதனை நாடு கடந்து பரப்பி விடுவோம். மெசேஜிங் வசதி என்பது இந்த செல்போனின் ஒரு
மிகப்பெரிய சேவை என்பது யாவரும் முன்னர் அறிந்ததே. முன்பெல்லாம் இதற்கென தனியாக
ரீசார்ஜ் செய்து நண்பர்கள், காதலர்கள் என்று பலர் தங்கள் உறவை வளர்த்து
கொண்டிருந்தனர். ஆனால் இந்த பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின்
அளப்பரிய வளர்ச்சியால் இந்த உலகம் மிகவும் சுருங்கி போனது என்பது யாராலும் மறுக்க
முடியாத உண்மை. எங்கோ வசிக்கும் முகம் தெரியாத நபர்களிடத்து கூட இங்கே நட்பு
பாராட்ட முடியும். படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்,
உறவினரிடன் எப்போதும் நட்பு வட்டத்தில் இருக்க முடிவது இங்கே சாத்தியம். குறிப்பாக
இந்த வாட்ஸ்அப்பில் போட்டோ வீடியோ என அனைத்தையும் உடனே அனுப்பி விட முடியும்.
இதனால் யாருக்கும் ஒரு நிகழ்வை தவற விட்ட நினைப்பே வராது, மாறாக உடனே இருந்து
கண்டு கழித்த மகிழ்வை ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த
பேஸ்புக்கில் உலவும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்,
இல்லையேல் இந்த பேக் ஐடியிடம் சிக்கி சின்னாபின்னமாய் போய் விடுவோம். அதுவும் என்
நண்பர்கள்ல சில பேரு அந்த பொண்ணு விட்டு போய்ட்டா மச்சினு ரொம்ப பீலிங்கா
சுத்திகிட்டு இருப்பான், கடைசியில் பாத்தா அவன அப்புடிலாம் அலைய விட்டதே அவனோட ஒரு
பிரெண்ட்டா தான் இருக்கும்.
எனக்கு நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்ன
சொல்றேன், லீவுக்கு ஊருக்கு போறப்ப புதுசா வாங்குன போன் பாருங்க பாட்டினு காட்டுனா
அதுக்கு அவங்க இதை நான் போன வாரமே உன் ப்ரொபைல்ல பாத்துட்டேன் அப்பு, கொஞ்சம்
பொறுத்து 2 வாரம் கழிச்சு வர்ற அந்த புது
மாடல் இறக்கிருக்கலாம்னு எனக்கே ஷாக்க குடுக்குறாங்க. ஆனா இன்னொரு பக்கம் இவ்வளவு
வளர்ச்சிக்கு பின்னரும் இந்த பார்வேர்டு மெசேஜ்க்குனு ஒரு க்ரூப் சுத்துவாய்ங்க
பாருங்க, இதை 10பேருக்கு அனுப்புனா இன்னைக்கு நைட்டுக்குல்ல நல்ல செய்தி
வரும், இல்லேனா பெரிய பாவம்னு ரேஞ்சுக்கு எபெக்ட்ட கொடுப்பாய்ங்க.. டேய்,
நீங்கல்லாம் எங்க இருந்துடா கிளம்பி வரீங்கங்குற மாதிரி இருக்கும்.
முன்பெல்லாம் எப்போது தேவையோ அப்போது தான்
போட்டோ எடுப்பபாங்க, ஆனால் இந்த மொபைல் யுகத்தில் எப்போதும் எங்கும் போட்டோ மயம்
தான். அதுவும் இந்த செல்பி போட்டோவின் அடிமைகளில் நானும் ஒருவன், எங்கும்
எப்போதும் செல்பி செல்பி தான். இன்றைய காலத்தில் பாட்டு கேட்க பிடிக்காதவரை
காண்பது மிக அரிது, முதலில் எல்லாம் ஒரு பாடல் கேட்க வேண்டும் என்றால் கேசட் அல்லது
சிடி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த இண்டர்நெட்டின் அபரிமிதமான
வளர்ச்சியால் எதனையும் எதிர்பார்த்து காத்திருக்க தேவை இல்லை. அதற்கென இருக்கும்
பல விதமான தளங்களில் சென்று அது வெளியே ரிலீஸ் ஆகும் முன்னரே சுலபமாக டவுன்லோடு
செய்து உடனே கேட்டு விட முடியும். மேலும் இவ்வாறே மொபைலுக்கு தேவையான பல
அப்ளிகேசன்களையும் ஈசியாக டவுன்லோடு செய்து உபயோகபடுத்தி கொள்ளலாம்.தற்போது இந்த முன்பதிவு என்பது இந்த நெட்
மயத்தால் எங்கும் பரவி விட்டது என்றே சொல்லலாம். ரெயில் டிக்கெட், ஏர் டிக்கெட்,
பஸ் டிக்கெட் & சினிமா டிக்கெட் என அனைத்தையும் எளிதாக புக் செய்து கொள்ளலாம்.
அது போக எந்த சீட் வேண்டும் என்பது முதற்கொண்டு முன்கூட்டியே பார்த்து நமக்கு
ஏற்றவாறு புக் செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு திட்டத்தால் பல நேரம் பல
இடங்களில் நான் கூட நெரிசலில் இருந்து தப்பித்துள்ளேன்.
இப்பொழுதெல்லாம் மளிகை சாமான் முதல் வண்டி
வாங்கணும்னா கூட ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈசியா
பண்ணி முடிச்சிடலாம். என்ன வேணுமோ அதை பார்த்து முடிவு பண்ணி நம்ம முகவரிய
கொடுத்துட்டா மட்டும் போதும். சில தினங்களில் என்ன ஆர்டர் பண்ணோமோ அது வீடு தேடி
வரும், அப்ப பொருள பார்த்துட்டு பணம் குடுத்தா கூட போதும். இது போக செகண்ட்
ஹேன்ட்ல ஒரு பொருள் வாங்கணும்னாலும் இல்ல ரொம்ப நாளா சும்மா கிடக்குற பொருள தள்ளி
விடணும்னாலும் அதுக்கும் இந்த நெட்டில் பல வெப்சைட்ஸ் இருக்கு. அங்க போய் என்ன
வாங்கணுமோ அதை தேடி பார்த்து சம்மந்தப்பட்ட நபருடன் பேரம் பேசி அவர் கூறும்
இடத்துக்கு சென்று வாங்கி கொள்ளலாம், இதுவே ஒரு பொருள விக்கணும்னா அதோட போட்டோவ
எடுத்து அதோட விலைய போட்டா மட்டும் போதும், அதை பாக்குறவங்க யாராவது அது வேணும்னா
கால் பண்ணி வந்து வாங்கிக்குவாங்க. இது மாதிரி இந்த ஆன்லைன் ஷாப்பிங்னால இப்பலாம்
யாரும் பொதுவா ஏதும் வாங்கணும்னா கூட வெளிய போய் அலையுறது இல்லை. வெகு
விரைவாக இந்த உலகம் செல்லும் காலகட்டத்தில் நானும் அப்டேட்டட் ஆக இருக்க முடிகிறது
என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த இன்டர்நெட் மற்றும் செல்போன் தான். வாழ்வின்
ஒவ்வொரு மணித்துளியையும் அதுவே நிர்ணயித்து என்னை எப்போதும் மகிழ்வாக
வைத்திருப்பதில் அதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை...
~ கண்ஸ் :)